ETV Bharat / state

பட்டுக்கோட்டை சுயேட்சை வேட்பாளர் திடீர் மரணம்: வைரலாகும் சர்ச்சை வீடியோ!

பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட பாலகிருஷ்ணன், திமுக, தமாக ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக 24 ஆயிரம் வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தார்.

பட்டுக்கோட்டை சுயேட்சை வேட்பாளர் திடீர் மரணம்: வைரலாகும் வாக்குமூலம் வீடியோ!

author img

By

Published : May 12, 2021, 5:17 PM IST

தஞ்சாவூர்: உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணன் நேற்று (மே.11) உயிரிழந்தார்.

பாலகிருஷ்ணன் முத்தரையர் வகுப்பைச் சேர்ந்தவர். பட்டுக்கோட்டை தொகுதியில் இந்த வகுப்பினர் அதிகம் உள்ள நிலையில் அனைத்து கட்சிகளிடமும் இத்தொகுதியில் முத்தரையர் வகுப்பு போட்டியிட வாய்ப்பு தாருங்கள் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அரசியல் கட்சிகள் இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்காத நிலையில், அந்த சமுதாய மக்கள் ஒன்று கூடி, பாலகிருஷ்ணனை வேட்பாளராக்கி தேர்தலில் போட்டியிட வைத்தனர். சமுதாய மக்களே முன்னின்று வேலை செய்ததால், பெரிய கட்சிகளுக்கு இவர் பெரும் போட்டியாக விளங்கினார். சுயேட்சை வேட்பாளராக இருந்த போதிலும் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

இந்நிலையில், உடல்நலம் சரியில்லாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணன், திடீரென உயிரிழந்தார். இச்செய்தி பலதரப்பட்ட மக்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னர் பாலகிருஷ்ணன் ”நான் தேர்தலில் தோற்றால் நிச்சயம் இறந்து விடுவேன்” என சொல்லி கண்ணீர் விட்டு கதறி அழுதபடி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: சபாநாயகர் அப்பாவுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.