ETV Bharat / state

பள்ளி மாணவி தற்கொலை - தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை - அரியலூர் மாணவி தற்கொலை

தஞ்சாவூரில் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Ariyalur student commits suicide
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை
author img

By

Published : Jan 31, 2022, 5:49 PM IST

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி அடுத்த மைக்கேல்பட்டியில், கிறிஸ்தவ பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த அரியலூரைச் சேர்ந்த மாணவி, ஜனவரி 19ஆம் தேதியன்று விஷம் குடித்த அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், சிசிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விவகாரத்தில், மதம் மாற கட்டாயப்படுத்தியதால் தான் தற்கொலை செய்து கொண்டதாக மாணவி கூறும் வீடியோ ஒன்று வெளியானது.

இதுதொடர்பாகப் பல போராட்டங்களும் நடந்தன. தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இந்த வழக்கு தொடர்பாக பிறப்பித்த உத்தரவின்படி, மாணவியின் பெற்றோர் தஞ்சாவூரில் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தனர். மேலும் வீடியோ எடுத்த முத்துவேல் என்பவரும் வல்லம் டிஎஸ்பி பிருந்தா முன்னிலையில் ஆஜராகி செல்போனை ஒப்படைத்தார்.

இந்நிலையில் டெல்லியிலிருந்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங்கா கனூப், மருத்துவர் ஆனந்த் உள்ளிட்ட நால்வர் குழுவினர், தஞ்சாவூர் ரயில்வே அலுவலர்கள் ஓய்வறையில் மாணவி உயிரிழந்தது தொடர்பாக, விசாரணையைத் தொடங்கினர்.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

இதில் தற்போது, தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட ஆட்சியர் சுபத்ரா, தஞ்சாவூர் எஸ்பி ரவளி பிரியா, விசாரணை அலுவலரான டிஎஸ்பி பிருந்தா, தஞ்சாவூர் தாசில்தார் மணிகண்டன், மாவட்ட கல்வி அலுவலர் குழந்தை வேலு, முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார், குழந்தைகள் நலக்குழு தலைவர் உஷா நந்தினி, அரசு டாக்டர் ஜீவானந்தம், ஹேமா அகிலாண்டேஸ்வரி உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதையும் படிங்க: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புதிய திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.