ETV Bharat / state

குழந்தைகள் முன்னே தாய் வெட்டிக் கொலை - தஞ்சையில் பரபரப்பு - Exposure to murder in a money dispute

தஞ்சாவூர்: குழந்தைகளின் கண் முன்னே தாய் மற்றும் அவரது நண்பரை வெட்டிப் படுகொலை செய்த பெண் உள்ளிட்ட மூன்று பேரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Killers
கொலையாளிகள்
author img

By

Published : Nov 26, 2019, 1:10 PM IST

தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரியத்தில் இ பிரிவில் வனிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் கணவர் இறந்துவிட்டதால் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட வேலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியரகத்தில் OA -வாக பணிபுரிந்து வருகிறார்.

வனிதா தனது சித்தி பையனான பிரகாஷ் என்பவரிடம் ரூ.2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதில் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் கொடுத்த நிலையில், மீதமுள்ள 50 ஆயிரத்தை வனிதா திருப்பி தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து தஞ்சை தெற்கு காவல் நிலையத்திலும் வனிதா மீது பிரகாஷ் புகார் அளித்துள்ளார்.

ஆனால் புகார் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று காலையில் வனிதா வீட்டிற்கு தனது காதலி மகேஸ்வரி, நண்பர் சூர்யா ஆகியோருடன் வந்த பிரகாஷ் தகராறில் ஈடுபட்டபோது ஆத்திரமடைந்த பிரகாஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வனிதா மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் வனிதாவின் குழந்தைகள் கண்முன்னே வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

வனிதாவின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பும் காவல்துறையினர்

குழந்தைகள் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்த போது, வனிதா மற்றும் கனகராஜ் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் உடனடியாக இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட கண்காணிப்பாளர் மகேஸ்வரன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கைப்பந்துப் போட்டியால் வந்த பகை - இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை!

Intro:தஞ்சாவூர் நவ 26

குழந்தைகளின் கண் முன்னே தாய் மற்றும் மற்றும் அவரது நண்பர் கனகராஜ் ஆகிய இருவரும் வெட்டிப்படுகொலை, தப்பியோடிய பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்Body:

தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரியத்தில் E பிரிவில் வனிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் கணவர் இறந்து விட்டதால் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட வேலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியரகத்தில் OA வாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது சித்தி பையன் பிரகாஷ் என்பவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் கொடுத்த நிலையில், மீதி 50 ஆயிரம் ரூபாய் தரவில்லை கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்துள்ளது. மேலும் தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் வனிதா மீது பிரகாஷ் புகார் அளித்துள்ளார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது, இதனையடுத்து இன்று காலை பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளி சூர்யா, மற்றும் பிரகாஷின் காதலி மகேஸ்வரி ஆகிய 3 பேரும் வனிதாவின் வீட்டிற்கு வந்து வனிதாவுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதில் தகராறு முற்றியதில் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் சூர்யியா, பிரகாஷின் காதலி மகேஷ்வரி ஆகியோர் சேர்ந்து குழந்தைகளின் கண் முன்னே வனிதா மற்றும் கனகராஜை வெட்டி சாய்த்து உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். பிறகு மூன்று பேரும் தப்பி ஓடிவிட்டனர், இதனை கண்ட குழந்தைகள் கதறி துடித்தது அலறியுள்ளனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர், உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் மகேஸ்வரன் விசாரணை மேற்கொண்டார். குழந்தைகளின் கண் முன்னே நடந்த இந்த இரட்டைக்கொலை தஞ்சையில் பரப்பபை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.