தஞ்சாவூர்: கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், பாலக்கரை - நீலத்தநல்லூர் சாலையில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இயங்கும் மாணவர் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். சுமார் 40 ஆண்டு கால பழமையான இந்த கட்டடத்தில் இயங்கும் விடுதியில், ஆங்காங்ககே சுவர்கள் பெயர்ந்து விழுந்த வண்ணம் உள்ளது.
அதேபோல் குளியலறை மற்றும் கழிப்பறை தூய்மை இல்லாமலும், சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும் உள்ளது. மேலும் விடுதியின் அருகில் கழிவுநீர் கால்வாய் உள்ளதால், நாள் முழுவதும் கொசுத் தொல்லையாக இருப்பதாகவும், விடுதியில் வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை என கூறி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கும்பகோணம் டிஎஸ்பி அசோகன், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் அழகேசன் ஆகியோர் மாணவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டம் தற்காலிகமாக விலகிக் கொள்ளப்பட்டதாக மாணவர்கள் அறிவித்தனர்.
இதையும் படிங்க: தனியார் தங்கும் விடுதி இடிந்து விபத்து - மூன்று பெண்கள் காயம்