தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 12ஆவது பட்டமளிப்பு விழா தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ் ஆட்சிமொழித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன், பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழாவில் பத்தாயிரத்து 571 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.
பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டத்தை மொரீசியஸ் நாட்டின் முன்னாள் அமைச்சரும் உலக திருக்குறள் மைய நிறுவனத்தைச் சேர்ந்தவருமான ஆறுமுகம் பரசுராமன், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், கவிஞரும் எழுத்தாளருமான கல்யாணசுந்தரம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவில் பேசிய தமிழ் ஆட்சிமொழித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன், உலகத்தில் முறையாம் திருக்குறள் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட முதன்மை நூலாக அறிவிக்க ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும் என வேண்டுகோள்விடுத்தார்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் ஆளுநர் இருக்கும்வரை நிர்மலா தேவி வழக்கு முடியாது