டெல்டா பாசனத்துக்காக காவிரி ஆற்றில் இருந்து 2500 கன அடி தண்ணீரும், வெண்ணாற்றில் இருந்து 2500 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாயிலிருந்து 2017 கன அடி தண்ணீரும், கொள்ளிடம் ஆற்றிலிருந்து 505 கனஅடி தண்ணீரும், பிள்ளை வாய்க்காலில் இருந்து 5 கனஅடி தண்ணீரும், கோவிலடி வாய்க்காலிலிருந்து 5 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 7532 கன அடி தண்ணீர் டெல்டா பாசனத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையை பொறுத்தவரை இன்று (ஜனவரி 1) மாலை 4 மணி நிலவரப்படி 105.24 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. 71.799 டிஎம்சி தண்ணீர் உள்ளது. அணைக்கு 722 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாசனத்துக்காக அணையில் இருந்து 2000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
அதேபோல திருக்காட்டுப் பள்ளியில் இன்று மாலை 4 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் 1334 கன அடி தண்ணீரும், குடமுருட்டி ஆற்றில் 1026 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 2360 கனஅடி தண்ணீர் டெல்டா பாசனத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது.