ETV Bharat / state

மாணவர்களுக்கு ரூ.25ஆயிரம் ஊக்கத் தொகை!.. ‘பொய்யான தகவலை நம்ப வேண்டாம்’ - தஞ்சை மேயர் ராமநாதன் - பிரதமர் மோடி பெயரில் மோசடி

தஞ்சாவூரில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமர் மோடி ரூபாய் 25 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கிறார் என பொய்யான தகவல்களை நம்பி மாணவர்களும், பெற்றோர்களும் அரசு அலுவலகங்களுக்குச் சென்று ஏமாற்றமடைய வேண்டாம் என மாநகராட்சி மேயர் ராமநாதன் கேட்டுக்கொண்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 27, 2023, 3:55 PM IST

சமூக வலைதளத்தில் பரவிம் செய்தி குறித்து விளக்கும் மேயர்

தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாநகராட்சி மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாள்களாக ஒரு செய்தி பரவி வருகிறது. அதில், “பிரதமர் மோடி, அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் ஸ்காலர்ஷிப் ஒன்றை அறிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் ரூபாய் 10 ஆயிரமும், 85 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூபாய் 25 ஆயிரமும் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்ப படிவம் முனிசிபல் அலுவலகத்தில் கேட்டு பெற்றுக் கொள்ளவும், இந்தப் பதிவை தவிர்த்து விடாமல் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள், ஏனெனில் இந்த செய்தி நமக்கு தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாம் அல்லவா, எனவே பகிருங்கள் நண்பர்களே” என்ற வாசகத்துடன் உயர் நீதிமன்ற உத்தரவு எண் என அச்சிடப்பட்டு, தமிழ்நாடு முழுதும் பரப்பப்பட்டுள்ளது.

இந்த தகவலை பார்ப்பவர்கள் மற்ற நபர்களுக்கு அனுப்புவதால் இந்த தகவல் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து அந்த செய்தியின் உண்மை தன்மையை அறியாமல் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தஞ்சாவூர் முனிசிபல் அலுவலகத்திற்குச் சென்று ஊக்கத்தொகை விண்ணப்பம் கேட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

முனிசிபல் அலுவலகத்தில் ஊக்கத் தொகை வழங்குவதற்கு என எந்த விண்ணப்பமும் வழங்குவதில்லை என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இது தவறான தகவல் ஆகும் என கூறி பெற்றோர் மாணவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். இது குறித்து தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன் கூறுகையில், “தஞ்சாவூர் மாநகராட்சியில் ஊக்கத்தொகை வழங்குவதற்கு என எந்த விதமான விண்ணப்பமும் வழங்கப்படுவதில்லை.

இது போன்ற பொய்யான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். இதனால் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுபோல் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

சமூக வலைதலத்தில் பெரும்பாலான தகவல்கள் பொய்யான தகவல்களை பரப்பப்படுகிறது. இதேபோல் நீண்ட காலமாக ஒரிஜினல் சான்றிதழ் என்னிடம் பத்திரமாக உள்ளது உரியவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என செல் நம்பரை தெரிவித்து அதுபோன்ற செய்திகளும் நீண்ட நாட்களாக உலா வருகிறது. மேலும், பிரபல தொலைக்காட்சிகளில் செய்தி வந்துள்ளது போல் லோகோ வைத்து தவறான செய்தியை வெளியிடுகின்றனர்.

இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என குழப்பத்தில் உள்ளனர். இது போன்ற தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: "ஒவ்வொரு தடவையும் இதே வேலையா போச்சு... விழுந்தா என்ன பண்ணுவீங்க": பிடிஓ-வை ரெய்டு விட்ட ஆட்சியர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.