ETV Bharat / state

"காவிரி நீரை பெற திராணி இல்லாத திமுக அரசு" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 9:57 PM IST

Cauvery Water: கர்நாடக அரசிடமிருந்து காவிரி தண்ணீரை பெற்றுத்தர இயலாத திராணி அற்ற அரசாக திமுக உள்ளது என முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

தஞ்சாவூர்: அதிமுக கட்சி சார்பில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரைப் பெற முயற்சி மேற்கொள்ளாமலும், உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசைக் கண்டித்தும், குறுவை சாகுபடி மேற்கொண்ட சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ 35 ஆயிரம் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், விவசாயிகளுக்குத் துரோகம் இழைத்த திமுக அரசைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். பின்னர் திமுக அரசைக் கண்டித்தும், கர்நாடக அரசைக் கண்டித்தும் கட்சியினர் கோஷம் எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ் ”டெல்டா மாவட்டத்திற்கு உரியத் தண்ணீரைப் பெற்றுத் தருவதற்கு முதலமைச்சர் தவறிவிட்டார். கர்நாடக அரசிடம் உரியக் காலங்களில் தண்ணீர் பெற்றுத்தரத் தவறியதால் சுமார் 3.5 லட்சம் ஏக்கர் கருகிப் போய்விட்டது. இதனால் சம்பா சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது.

ஆகவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ 35 ஆயிரம் இழப்பீடு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டாதது விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது, ”அதிமுக அரசு டெல்டா விவசாயிகளை மனதில் வைத்துக் கொண்டு டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது மட்டுமல்ல, வறட்சி, புயல், வெள்ளம் வந்த போது ரூ 2,268 கோடி நிவாரணம் வழங்கியது. இந்தியாவிலேயே எந்த மாநிலமும் கொடுக்காத அளவிற்கு அதிகபட்சமாக ரூ 9,600 கோடி பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை முன்னாள் முதலமைச்சர் ஈபிஎஸ் கொடுத்தார்.

இன்றைக்குக் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் இல்லை. நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் தாமதம், அலட்சியம், சுணக்கம், கர்நாடக அரசிடமிருந்து தண்ணீர் கேட்டுப் பெற முடியாத திராணி அற்ற அரசாக திமுக உள்ளது என்று குற்றம்சாட்டினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் சேகர், மாநகர செயலாளர் சரவணன், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், அமைப்புச் செயலாளர் காந்தி, கொள்கை பரப்பு துணை செயலாளர் திருஞானம் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: உரிய இழப்பீடு வழங்காமல் நிலத்தை கையகப்படுத்தியது ஏன்? - ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.