தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த மூன்று நாட்களாக இரவு பகல் என இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
இதனால் இப்பகுதியில் சம்பா சாகுபடிக்காக பயிர் செய்யப்பட்ட விளைநிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் தற்போது சாகுபடி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
கிட்டதட்ட 250 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. உரம் இடப்பட்ட நிலையில் தண்ணீர் தேங்யுள்ளதால் இந்த பயிர்கள் அனைத்தும் அழுகிவிடும் என்று இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது தவிர தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் இந்த பயிர்களை காப்பாற்ற வழி தெரியாமல் தவித்து வருகின்றனர்.
மழை நீரில் சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.