ETV Bharat / state

'போர்க்கால அடிப்படையில்  வீடு கட்டி கொடுக்க வேண்டும்' - அரசுக்கு கோரிக்கை - TanJavur Latest News

தஞ்சாவூர்: பூதலூர் பட்டியலினத்தவர் காலனியில் உள்ள வீடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் இதனை உடனடியாக சரி செய்து தர அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

dot-budalur-hunter-houses-repair
dot-budalur-hunter-houses-repair
author img

By

Published : Sep 13, 2020, 2:52 AM IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூதலூரில் பட்டியலினத்தவர் காலனி உள்ளது. இந்த காலனியில் 56 வீடுகள் உள்ளது. இந்த பகுதியில் குழந்தைகள் உள்பட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் அரசு காட்டிக்கொடுத்த காலனி வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தற்போது அங்குள்ள வீடுகளில் மேற்கூரைகள் முற்றிலும் பெயர்ந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து விடும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் அரசிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.மேலும் தற்போது மழை பெய்யும் பொழுது மழை நீர் வீட்டிற்குள் வந்து விழுவதால் சிறியவர் முதல் பெரியவர்கள் என அனைவரும் மழையில் நனைந்தபடியே வாழ்வதாக கூறுகின்றனர்.

எனவே அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் தரமான வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.