தஞ்சாவூர்: கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் சக்கரபாணி என்பவர் வீட்டின் முன் இன்று காலை வெடி சத்தம் கேட்டதாகவும், வெளியில் வந்து பார்த்த போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து சக்கரபாணி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தஞ்சையில் இருந்து தடய அறிவியல் நிபுணர் குழுவினரும் வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறனர்.
இதற்கிடையே தஞ்சை மாவட்ட எஸ்பி ரவளிப்பிரியா சம்பவயிடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது பேட்டி அளிக்க மறுத்து விரைந்து சென்று விட்டார். இந்து முன்னணி நகர செயலாளர் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: அவதூறு கருத்து பதிவிட்டதாக வழக்கு.. கிஷோர் கே சாமி கைது.!