தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேசிமுக் சேகர் சஞ்சய், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், "அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்காமல் திருமணம், இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலானோருக்கு தொற்று பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. எனவே, கரோனா பரவல் சங்கிலியை உடைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
முதலமைச்சரின் ஆணைக்கிணங்க தொற்று பாதிப்புக்கேற்றவாறு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 மருத்துவர்களும் 50 செவிலியர்களும், ஊரகப் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு 60 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் எனத் தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். கருப்பு பூஞ்சை நோய் பாதித்து இரண்டு நபர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: 'அவதூறு பரப்பாதீர்' - வானதி சீனிவாசனுக்கு மா. சுப்பிரமணியன் பதிலடி