தென்காசி மாவட்டம் அரியப்புரம் கிராமத்தைச் சேர்ந்த பவித்ரா (22). தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்து தலைநகர் சென்னையில் ஆயுதப் படையில் பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் சீருடையில் பணிக்குச் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த பவித்ராவின் உடல் சென்னையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் அரியப்புரத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பவித்ராவின் உடலுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், துணை காவல் கண்காணிப்பாளர் உள்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர், 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: முதலமைச்சர் வீட்டில் பாதுகாப்பு பணியிலிருந்த காவலருக்கு கரோனா!