தென்காசி: புளியங்குடி அருகே உள்ள அரியநாயகிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியசாமிபுரம் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்கிறது. மேலும், இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் குளம் போல் காட்சியளிக்கிறது.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக இந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி செல்கிறது. இது பற்றி அரியநாயகிபுரம் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
அரியநாயகிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்வதால் குளம் போல் காட்சியளிக்கிறது.
இந்த சாலையில் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு செல்வதும் வருவதும் வழக்கம். சைக்கிளில் செல்லும் மாணவர்கள் இந்த குளம் போல் காட்சியளிக்கும் தண்ணீரில் விழுந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்தும், இந்த சாலையை சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குடும்ப தகராறு...மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்