தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் முனியசங்கர். இவரது மனைவி துர்க்காதேவி. இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை நேற்று வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த கழிவு நீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது. நீண்ட நேரமாகியும் குழந்தையை காணவில்லை என்பதால் துர்க்காதேவி நீண்ட நேரமாக தேடியுள்ளார்.
கழிவுநீர் தொட்டியில் மிதந்த குழந்தை
இதையடுத்து குழந்தை கழிவு நீர்த்தொட்டியில் கிடப்படதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பெற்றோர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு குழந்தை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் மீது ரயில் மோதி விபத்து