ETV Bharat / state

குற்றாலத்தில் விடுமுறை தினத்தையொட்டி அதிகரிக்கும் பயணிகள் வருகை! - Tourist arrivals increase in Courtallam

Courtallam: குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், நான்கு நாட்கள் விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றாலத்தில் விடுமுறை தினத்தையொட்டி அதிகரிக்கும் பயணிகள் வருகை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 1:31 PM IST

குற்றாலத்தில் விடுமுறை தினத்தையொட்டி அதிகரிக்கும் பயணிகள் வருகை

தென்காசி: குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களும் சீசன் காலமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மாதங்களில் மேற்குதொடர்ச்சிமலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையினால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும். இதனால் அருவிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்வது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டு சீசன் சற்று தாமதமாக துவங்கினாலும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குவிந்த வண்ணமாகவே காணப்படுகின்றனர். இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக குற்றாலம் மெயின் அருவி பகுதியில், பல கடைகளில் விபத்து நேரிட்டு, அதில் சுமார் 40க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் கருகின.

இதன் காரணமாக, குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று குறைவாகவே காணப்பட்டது. ஆனால், தற்பொழுது கடந்த ஒரு வார காலமாகவே தென்காசி மாவட்டம் முழுவதும் சாரல் மழை அவ்வப்போது பெய்து வருவதாலும், இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பாக கனமழை பெய்ததாலும், குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இதையும் படிங்க: கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் பைன் செட்டியா மலர்கள்!

இதனால் உள்ளூர்வாசிகள் முதற்கொண்டு, வெளி மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் என ஏராளமானோர் அருவியில் குளிக்க வந்த வண்ணமாக இருந்தனர். மேலும், தற்பொழுது குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகமாக இருப்பதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

மேலும், இன்றிலிருந்து நான்கு நாட்கள் விடுமுறை தினம் என்பதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போதைய நிலவரப்படி, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து, வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. மேலும், தினசரி சாரல் மழையுடன் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி பகுதிகளில் இதமான சூழல் நிலவுகிறது.

இதையும் படிங்க: 83 எம்பிபிஎஸ் இடங்கள் காலி; செப்.30-க்குப் பிறகான மாணவர் சேர்க்கை செல்லாது - தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.