தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சண்முகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரது மகன் யுவன் (4), அதே பகுதியைச் சேர்ந்த பூபாலன் என்பவரது மகள் சண்முகப்பிரியா (5), கண்ணன் என்பவரது மகன் இஷாந்த் (5). இவர்கள் மூன்று பேரும் உறவினர்கள்.
தர்மராஜ், பூபாலன், கண்ணன் ஆகிய மூவரும் கூலி வேலை செய்துவருகின்றனர். இந்நிலையில், அவர்களின் குழந்தைகள் மூன்று பேரும் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னர் அருகே உள்ள குளத்துக்குச் சென்று நீரில் இறங்கி விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது குழந்தைகள் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக்கண்ட அருகிலிருந்தவர்கள் உடனே குழந்தைகளை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
இருப்பினும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே, மூன்று குழந்தைகளும் உயிரிழந்தனர். இது குறித்து ஆலங்குளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த மகளை வெட்டிக்கொன்ற தந்தை!