தென்காசி: கடையநல்லூரில் பெஸ்ட் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் (அக்.12) Founders Day Competition என்ற பெயரில் குழந்தைகளுக்கு பேச்சுப்போட்டி, பாடல் போட்டி உள்ளிட்ட பல்சுவை போட்டிகள் ஆசிரியர்களால் நடத்தப்பட்டன.
நாட்டின் எதிர்கால வளர்ச்சியை தீர்மானிப்பவர்கள் இன்றைய குழந்தைகள் தான். இவர்களே நாளைய தலைவர்கள் ஆவர். அந்த வகையில் குழந்தைகளுக்கு நபிகள் நாயகத்தின் அறிவுரை, பகவத் கீதையின் உபதேசங்கள் மற்றும் விளக்கங்கள், பைபிள் வசனங்கள் மற்றும் அதன் விளக்கம் கூறுதல், பாடல் போட்டி, வரைதல், கதை சொல்லுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
மேலும், இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், இதன் மூலம் இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகும். மேலும், பள்ளியில் அடிப்படை கல்வி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அந்த வகையில் இந்நாள் வரைக்கும் அவர்கள் கற்றுக் கொண்ட அடிப்படை கல்வியை, இந்த பள்ளியின் 'பவுண்டேஷன் டே' அன்று அவர்களே சொல்லும் ஒரு நிகழ்வு தான் இந்தப் போட்டி.
இதில், ஒவ்வொரு குழந்தைகளும் தங்களுடைய திறமைகளை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்தினர். ரைம்ஸ், இலக்கிய நடை, கதைகள், மதம் சார்ந்த கதைகள் என பல்வேறு விதத்தில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் குழந்தைகள் பேசும் போது, அவர்களை ஆர்வப்படுத்தும் வகையில் அவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் அதே இடத்தில் வழங்கப்பட்டது.
மேலும், இன்று இந்த பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையிலும், குழந்தைகளின் தனித்திறமையை வளர்க்கும் நிகழ்வான இப்போட்டிகளே நடைபெற்றது. மேலும், பள்ளி மாணவ - மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில், சிறப்பாக பங்கேற்ற அதே பள்ளியைச் சேர்ந்த 2 பேரை தனியாக தேர்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதையும் படிங்க: தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் நியமனம் எப்போது? - மத்திய அரசு நீதிமன்றம் கேள்வி