தென்காசி: தென்காசி யானை பாலம் சிக்னல் அருகே உள்ள சிற்றாறு படித்துறை பகுதியில் முதியவர் ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில், உயிரிழந்து கிடப்பதாக தென்காசி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற தென்காசி போலீசார், உயிரிழந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், படித்துறை பகுதியில் இருந்த சாமி சிலையை வைத்து தலையில் அடித்து கொலை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த நபர் யார்? அவரை கொலை செய்த மர்ம நபர் யார்? என்பது குறித்து தென்காசி போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் முன்பு முதியவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இது போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க போலீசார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கடலூரில் மூளைச் சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்பு தானம் - அரசு மரியாதையுடன் நடந்த தகனம்!