தென்காசி: அரசு கல்லூரியில் வணிகவியல் துறையில் மாணவி ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவருக்கு வழிகாட்டியாக இருந்து வந்த பேராசிரியர் வேறு கல்லூரிக்கு மாறுதலாகி சென்றுள்ளார். இருப்பினும் மாணவி இதே கல்லூரியில் வணிகவியல் துறையில் ஆய்வுப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
வணிகவியல் துறையில் தலைவராக இருந்து வரும் அஜித் என்பவர் கடந்த 7 மாதங்களாக பிஎச்டி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் சார்ந்த தொந்தரவுகளை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி முதலமைச்சரின் தனிபிரிவுக்கு புகார் மனு தெரிவித்துள்ளார்.
அந்த மனுவில், "மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆய்வு அறையில் அமர்ந்து கொண்டு முகம் சுழிக்கும் வகையில் வார்தைகளைப் பேசியும். மேலும் இரட்டை அர்த்தத்திலும் பேசி வருவதாகவும் அறையின் மின் இணைப்புகளை நிறுத்திவிட்டு கதவையும் சாத்துவதுமாக செயல்பட்டு வருகிறார். மேலும் தன்னிடம் நேரடியாக வந்து ஆய்வு வழிகாட்டியை மாற்றிவிட்டு அவருடன் வந்துவிட வலியுறுத்தியும், அவர் மனது வைத்தால் தான் ஆய்வு படிப்பை முடிக்க முடியும் எனக்கூறி மிரட்டுகிறார்" என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வீடியோ: அரிசியில் தத்ரூபமாக முதலமைச்சர் ஸ்டாலின் உருவம்