ETV Bharat / state

ரூ.2 கோடிக்கு மேல் ஊராட்சி தலைவி ஊழல் செய்ததாக உறுப்பினர்கள் குற்றச்சாட்டு - ஊராட்சி தலைவி மீது புகார்

தென்காசியில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் 2 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்துள்ளதாக மாவட்ட ஊராட்சி தலைவி மீது உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியதால் அவர், கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

ஊராட்சி தலைவி மீது குற்றச்சாட்டு
ஊராட்சி தலைவி மீது குற்றச்சாட்டு
author img

By

Published : Mar 12, 2022, 11:02 AM IST

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 3ஆவது மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் இன்று (மார்ச் 12) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் உறுப்பினர்களுக்குத் தெரியாமல் தீர்மானம் நிறைவேற்றி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி திமுக உறுப்பினர்கள் சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி வாக்கு வாதம் எழுந்த நிலையில் இதனை மறுத்த மாவட்ட ஊராட்சி தலைவர் கூட்டம் நிறைவடைந்ததாக கூறி பாதியில் கூட்டத்தை விட்டு வெளியேறினார். இது குறித்து மாவட்ட கவுன்சிலர் கனிமொழி கூறுகையில், “கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி மாவட்ட ஊராட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் உறுப்பினர்களிடம் ஏழு மன்ற பொருளை வைத்து ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் உறுப்பினர்கள் தலையீடு இல்லாமல் தற்போது அந்த குறிப்பானது 13ஆக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் தலைவி தன்னிச்சையாக சுமார் 1.5 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளார்.

ஊராட்சி தலைவி மீது குற்றச்சாட்டு

எனவே அந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் இல்லாதபட்சத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவதோடு திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை சந்தித்து முறையிடவுள்ளோம்” என தெரிவித்தார்.

மாவட்ட ஊராட்சி கவுன்சிலரை பொருத்தவரை திமுக, அதன் கூட்டணி கட்சி மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், நடைபெற்ற நிதி முறைகேடு வாக்குவாதத்தில் ஒரு சில திமுக உறுப்பினர்கள் மட்டுமே வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: கார்ப்பரேட் நிறுவனங்களால் ரத்த பரிசோதனை நிலையங்களுக்கு பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.