ETV Bharat / state

நரிக்குறவர் சமூக மக்களை பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளிய ஊரடங்கு! - narikuravar community

தென்காசி: கரோனா ஊரடங்கால் பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், தங்கள் தொழில் பாதிப்படைந்து பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தென்காசி மாவட்டம்  நரிக்குறவர் சமூகம்  tenkasi news  narikuravar community
நரிக்குறவர் சமூக மக்களை பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளிய ஊரடங்கு
author img

By

Published : Jul 15, 2020, 11:54 AM IST

தென்காசி மாவட்டம் கீழ வாலியன் பொத்தைப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் 25 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் வீதிகளிலும் பேருந்து நிலையங்களிலும் ஊசி, பாசி ஆகியவற்றை விற்பனை செய்துப் பிழைத்து வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டமின்றி பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால், இவர்களது தொழில் பாதிப்படைந்ததோடு நாள்தோறும் கிடைக்கும் 100 ரூபாய் வருமானம்கூட தற்போது அவர்களுக்கு கிடைப்பதில்லை.

நரிக்குறவர் சமூக மக்களைப் பாதித்த ஊரடங்கு

அவ்வப்போது, சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் தங்களுக்கு உதவி செய்து வந்தாலும் அது போதுமானதாக இல்லையெனத் தெரிவிக்கும் இச்சமூக மக்கள், நாங்கள் குடும்பத்துடன் வீதிகளிலும், சிக்னல்களிலும் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மேலும், குழந்தைகளுக்கு பால் வாங்கி கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருவதால் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை செய்து உதவ வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பெற்ற குழந்தையை வைத்து பிச்சையெடுத்த தாய்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.