மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக, தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை தற்போது நிரம்பி வழிகிறது. இயற்கையான சூழலில் குண்டாறு அணை அமைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டமாக வருவது வழக்கம்.
தற்போது தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், குறிப்பாக வார இறுதி நாட்களில் மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை மீறும் வகையில் கார், இருசக்கர வாகனங்களில் உள்ளூர், வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குண்டாறு அணைக்கு வந்து செல்கின்றனர்.
![Kundaru curfew violation](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07:06:49:1598189809_tn-tki-01-curfew-violation-7204942_23082020163729_2308f_1598180849_46.jpg)
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் அணையில் குளித்து வருகின்றனர். இதனால் கரோனா தொற்று, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அணையின் மேற்பகுதியிலுள்ள தனியார் தோட்டங்களில் நீர்தேக்கத்திற்கு வரும் நீரை தடுத்து செயற்கை அருவியை உருவாக்கி வைத்துக்கொண்டு ஜீப்களில் தனியார் அருவிகளுக்கு அழைத்துச் செல்லும் பணியும் நடந்துவருகிறது.
மேலும், காவல்துறையினர் எச்சரிக்கை பதாகைகள் வைத்தும், பாதுகாப்பு பணியில் இருந்தும் ஏராளமானவர்கள் அருவிக்கு வருகின்றனர். எனவே, எச்சரிக்கையை மீறி குளிப்பவர்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.