ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவால் நிகழ்ந்த கொலை.. மாமியார் வீடு முன் தலையை வீசிய கொடூரம்! - today latest news

Tenkasi murder: தென்காசி அருகே மனைவியுடன் தகாத உறவில் இருந்தவர் தலையை துண்டித்து கொலை செய்த கணவரை போலீசார் கைதுசெய்தனர்.

Tenkasi murder
மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்தவரை கொலை செய்த கணவர் கைது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 2:51 PM IST

Updated : Sep 23, 2023, 9:37 AM IST

தென்காசி: ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டி கண்ணாடிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி இவரது மனைவி இசக்கியம்மாள் இந்த தம்பதிக்கு பல ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாத நிலையில் வேலுச்சாமி இளநீர் வியபாரம் செய்து வருகின்றார்.

இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகனுக்கும், வேலுச்சாமியின் மனைவி இசக்கியம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவால் மாறியதாகவும் இதனை அறிந்த வேலுச்சாமி தனது மனைவி இசக்கியம்மாளை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வேலுச்சாமி தன் மனைவி இசக்கியம்மாளை அழைத்துக்கொண்டு கிராமத்தில் இருந்து வெளியேறி கயத்தாறு பாரதி நகர் பகுதியில் குடியேறியுள்ளார். சொந்த ஊரில் இருந்து கயத்தாறு வந்தாலும் வேலுச்சாமிக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் இருந்து வந்ததாகவும், இதனால் கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசக்கியம்மாள் கணவரை பிரிந்து கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் இருந்து வந்த வேலுச்சாமி இதற்கு காரணமான முருகனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து கயத்தாறில் இருந்து வேலுச்சாமி பைக்கில் கண்ணாடிகுளத்திற்கு வந்துள்ளார். அப்போது வயல்வெளியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த முருகனின் முகத்தை துணியால் மூடி மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து முருகன் உயிரிழந்துள்ளார். அப்படியும் ஆத்திரம் தீராத வேலுச்சாமி முருகனின் தலையை துண்டாக அறுத்து பைக்கில் இருந்த சாக்கு மூட்டையில் கட்டி எடுத்துக்கொண்டு பைக்கில் வேலுச்சாமி கயத்தாறு புறப்பட்டு சென்றார்.

இதனை அடுத்து ராஜாபுதுக்குடி கிராமத்தில் தனது மனைவி வசித்து வரும் மாமியார் வீட்டின் முன்பு சாக்குப்பையுடன் முருகனின் தலையை வைத்துவிட்டு அங்கு சுற்றி திரிந்தபோது, இது குறித்து ஊத்துமலை போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகைதந்த ஊத்துமலை போலீசார், வேலுச்சாமியை கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும், இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “ஹலோ நான் திருடன் பேசுறேன்”.. வடிவேலு பாணியில் பேரம் பேசிய நபர் சிக்கியது எப்படி?

Last Updated : Sep 23, 2023, 9:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.