கரோனா காரணமாக அரசின் உத்தரவின்படி நியாயவிலைக் கடைகளில் இலவச தொகுப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் இலவச தொகுப்புகளை வழங்குவதற்காக அனைத்துத் துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கலந்துகொண்டார். அவருடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், சட்டமன்ற உறுப்பினர்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், இன்பதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள ரூ.1000, அரிசி, பருப்பு உள்பட இலவச தொகுப்புகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அந்தத் தொகுப்புகள் டோக்கன் முறையில் வழங்கப்படும்.
ஒரு மணி நேரத்திற்கு 20 பேர் வீதம் இலவச தொகுப்புகள் - அமைச்சர் ராஜலட்சுமி
திருநெல்வேலி: தமிழ்நாடு அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ரூ.1000, அரிசி, பருப்பு உள்பட இலவச தொகுப்புகளை ஒரு மணி நேரத்திற்கு 20 பேர் வீதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.