ETV Bharat / state

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடி: நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு - seeking action

தென்காசி:  வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்,  உறுப்பினர்களில்  சேமிப்பு தொகையில் பல கோடி ரூபாய் அளவில் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடி: நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

author img

By

Published : Nov 2, 2020, 4:25 PM IST

தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரத்தில் கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கிவருகிறது. இதில் சுமார் 900க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு சிறு சேமிப்பு, வைப்பு நிதி, நகைக்கடன், விவசாய கடன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுவருகின்றன. இதில் பெரும்பாலானோர் லட்சக்கணக்கான ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் உறுப்பினர்கள் தமது கணக்கில் உள்ள சேமிப்புப் பணத்தை எடுக்கசென்றபோது, கணக்கில் வைப்புத் தொகை இல்லை என்று வங்கியில் கூறியுள்ளனர். இச்சம்பவத்தை அறிந்த பலர் தங்களது கணக்குகளை சரிபார்த்தபோது கணக்குகளில் சிறு தொகை தவிர பெரும் தொகைகள் எடுக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக உறுப்பினர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாத நிலையில் அப்பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் தங்களது பணத்தை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "பலரது கணக்கில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை வங்கி அலுவலர்களே எடுத்து மோசடி செய்துள்ளதாகவும், இந்த சேமிப்பு தொகையானது குழந்தைகளின் திருமணத்திற்கும், வீடு கட்டுவதற்காகவும் படிப்பிற்கும் சேமித்த தொகையாகும். எனவே இந்த பணத்தை திரும்ப பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.