ETV Bharat / state

6 வயது மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்த தந்தை.. பகீர் வாக்குமூலம் என்ன? - 6 year old boy killed by father near tenkasi

Tenkasi News:தென்காசி அருகே பக்கத்து வீட்டினருடன் நடந்த தகராற்றில் தனது ஆறு வயது மகனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆறு வயது மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்த தந்தை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 9:28 PM IST

தென்காசி: சிவகிரி அருகே உள்ள தென்மலை பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் இந்த பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். மேலும் முனியாண்டி - கார்த்திகை செல்வி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தென்மலையில் உள்ள செல்லப்பாண்டியன் தெருவில் வசித்து வருகின்றனர்.

இதில் மகிழன் என்ற சிறுவன் அப்பகுதியில் உள்ள செல்வ விநாயகர் தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்ட மகிழனை தந்தை முனியாண்டி பள்ளிக்கு அழைத்துச் சென்று பள்ளியில் விட்டு விட்டு பின்பு வேலைக்கு செல்வதாக கூறி சிறுவன் மகிழனை ஆழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர், பள்ளியில் மகிழனின் புத்தகப் பை இருந்துள்ளது, ஆனால் மகிழனை காணவில்லை என்பதால் அனைவரும் சிறுவன் மகிழலனை தேட ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் சிசிடிவி கட்சிகளை ஆய்வு செய்தபோது மகிழனை அவனது தந்தை முனியாண்டி அழைத்துச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுவனின் தந்தை முனியாண்டியின் செல்போனின் அலைவரிசை மூலம் அவர் இருக்கும் இடத்தை தேடும்போது, திருவேங்கடம் பகுதியில் அவர் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று முனியாண்டியை கைது செய்து அவரிடம் விசாரித்துள்ளனர்.

விசாரணையில் தன்னுடைய மகனை தானே கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் கொலை செய்தற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்த பொழுது, முனியாண்டி கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன் வீட்டின் அருகில் உள்ள வீட்டில் தண்ணீர் பிடிக்கும் போது இரண்டு பெண்களுகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவர்கள் சிறுவன் மகிழன் தனக்கு பிறந்த குழந்தை இல்லை என கூறியதை கேட்டு ஆத்திரமடைந்து தன் மகன் மகிழனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்ய முடிவெடுத்தாக கூறியுள்ளார்.

தொடர்ந்து காவல்துறையினர் முனியாண்யிடம் விசாரணை செய்ததில் தன்னுடைய மகன் மகிழனை புளியங்குடி அருகே உள்ள நவாச்சாலையில் என்ற பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக கூறியதோடு அந்த இடத்தை அடையாளம் காட்டியுள்ளார்.

இதனையடுத்து சிவகிரி காவல்துறையினர் வாசுதேவநல்லூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்பு தீயணைப்புத் துறையினரின் உதவியோடு கிணற்றில் மிதந்து கொண்டிருந்த சிறுவன் மகிழனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முனியாண்டியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் தண்ணீர் லாரி மோதி தாய் கண்முன்னே மகள் உயிரிழந்த சோகம் - லாரி ஓட்டுநர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.