தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கிடைத்த தகவலின்படி கடையம் வனத்துறை அலுவலர்கள் விசாரணைக்காக முத்துவை அழைத்து சென்றனர். விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட முத்துவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் விவசாயி முத்து ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையறிந்த உறவினர்களும், பொதுமக்களும் காவல்நிலையம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
வழக்கை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், சென்னையில் உள்ள முதன்மை வன பாதுகாவலர் நான்கு வாரத்தில் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: ஒரேநாளில் 1300கிலோ ரேஷன் அரிசி கடத்தல்!