தென்காசி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளான சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் உள்ளிட்ட தொகுதிகளுக்குள்பட்ட அஞ்சல் வாக்குகள் 50 விழுக்காடு மட்டுமே பதிவாகியுள்ளன.
மாவட்ட நிர்வாகம் சார்பில் அஞ்சல் வாக்குகளை முறையாக அனுப்பவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டதுடன், வாக்கு எண்ணிக்கை நாளுக்கு முன்பாக அனைத்து அஞ்சல் வாக்குகளும் பதிவுசெய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர்கள் சிவபத்மநாதன், செல்லத்துரை, நிர்வாகிகள் மாவட்டத் தேர்தல் அலுவலர் சமீரனிடம் மனு அளித்தனர்.
100 விழுக்காடு
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்டத் தேர்தல் அலுவலர் 100 விழுக்காடு அஞ்சல் வாக்குகள் பதிவாகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.