ETV Bharat / state

நீ மட்டும்தான் வீடியோ காட்டுவியா? - ஆபாச வீடியோவால் இளைஞரை கொலை.. தென்காசி எலும்புக்கூடு வழக்கில் பகீர் தகவல்! - செப்டிக் டேங்கில் எலும்புக்கூடு

தென்காசியில் இளம்பெண் உடன் தனிமையில் இருந்த இளைஞரை, அதே ஆபாச வீடியோவை வைத்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீ மட்டும்தான் வீடியோ காட்டுவியா? - ஆபாச வீடியோவால் இளைஞரை கொலை செய்த குடும்பத்தின் திடுக்கிடும் பின்னணி

author img

By

Published : Jun 8, 2023, 11:30 AM IST

தென்காசி: இலத்தூரைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பராமரிப்பு பணி நடைபெற்று உள்ளது. அப்போது, அவரது வீட்டில் இருந்த செப்டிக் டேங்கிற்குள் ஒரு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக இலத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து எலும்புக் கூடாக மீட்கப்பட்ட நபர் யார் என்றும், அவரை கொலை செய்து செப்டிக் டேங்கிற்குள் போட்டது யார் என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதேநேரம், இலத்தூர் பகுதியில் அதிக நாட்கள் காணமால் போன நபர்கள் யாரேனும் உள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி உள்ளனர். அதில் இலத்தூர் பகுதியைச் சேர்ந்த மது என்ற மாடசாமி என்பவர், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனது தொடர்பான வழக்கு இலத்தூர் காவல் நிலையத்திலும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் நிலுவையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

எனவே, கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூட்டில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவையும், காணாமல் போன கல்லூரி மாணவரான மதுவின் உறவினர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவையும் சோதனை செய்தபோது இரண்டும் ஒத்து போயுள்ளது. இதனைத் தொடர்ந்து, மது எப்படி கொலை செய்யப்பட்டார் என்றும், அவரை செட்டிக் டேங்கிற்குள் புதைத்தது யார் என்பது குறித்தும் மது வீட்டின் அருகே உள்ளவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், மது காணாமல் போன நாள் முதல் அந்த பகுதியைச் சேர்ந்த 3 பேர் குடும்பத்துடன் கோயம்புத்தூருக்கு வேலைக்குச் சென்றதும், அவர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது என தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் கோவை விரைந்த இலத்தூர் காவல் துறையினர், குடும்பத்துடன் கோவையில் இருந்த பேச்சியம்மாள், இசக்கியம்மாள் மற்றும் அவரது சகோதரர் தங்கபாண்டி உள்ளிட்ட மூவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த விசாரணையின் முடிவில், “கல்லூரி மாணவரான மாடசாமி என்ற மதுவுக்கும், அவரது வீட்டின் எதிரே உள்ள திருமணமான பேச்சியம்மாள் (24) என்வருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்துள்ளது. இதனால் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் இருவரும் தனிமையில் இருந்தபோது, மது தனது செல்போனில் இருவரின் தனிமையை வீடியோவாக எடுத்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், அதை வைத்து பேச்சியம்மாளை மிரட்டி அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில், மதுவின் தொந்தரவை தாங்க முடியாத பேச்சியம்மாள், இந்த சம்பவம் தொடர்பாக அவரது தாயார் இசக்கியம்மாளிடம் கூறி உள்ளார். அது மட்டுமல்லாமல், இந்த விஷயத்தை மது தனது கணவரிடம் கூறினால், தனது வாழ்க்கை பறி போய்விடும் என கூறியதை அடுத்து, இருவரும் திட்டமிட்டு மதுவை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மதுவை தனிமையில் சந்திக்க இசக்கியம்மாள் அழைத்துள்ளார். அப்போது, மதுவிடம் பேச்சியம்மாள் ஒரு ஆபாச வீடியோ ஒன்றை காட்டி, அது போல தாம் உறவு கொள்வோமா என கேட்டுள்ளார். இதற்கு மதுவும் சம்மதம் தெரிவிக்க, மதுவின் கை, கால்களை பேச்சியம்மாள் கட்டியுள்ளார்.

இதனையடுத்து, மதுவிடம் தனிமையில் இருப்பது போன்று நடித்து, அவரது கழுத்தை நெறித்து, தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர், மதுவின் உடலை பேச்சியம்மாள் மற்றும் அவரது தாயான இசக்கியம்மாள் ஆகிய இருவரும், அவரது சகோதரர் தங்கபாண்டியின் உதவியுடன் லட்சுமணன் வீட்டின் செப்டிக் டேங்கில் போட்டு மதுவின் உடலை மூடி உள்ளனர்” என தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பேச்சியம்மாள், இசக்கியம்மாள் மற்றும் அவரது சகோதரர் தங்கபாண்டி உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்கள் மூவரையும் செங்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுனில் ராஜா முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: விடுதி அறையில் இளம்பெண் சடலம்.. காவலாளி செய்த கொடூர சம்பவம்.. மும்பையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.