சிவகங்கை: தேவகோட்டை அருகே ரூபாய் 7000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தேவகோட்டை அருகே கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருபவர், திருமாறன். இவரிடம் தேராப்பூர் ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பிரமணி என்பவர், தேராப்பூரில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான திட்ட மதிப்பீட்டு ஆவணம் கேட்டு விண்ணப்பித்துள்ளார். திட்ட ஆவணம் வழங்க உதவி செயற்பொறியாளர் திருமாறன் ஊராட்சி மன்றத்தலைவரிடம் 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுப்பிரமணியன் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
அதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்த நிலையில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை உதவி செயற்பொறியாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பெறும்போது உதவி செயற்பொறியாளரை கையும், களவுமாகப் பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ”அடேங்கப்பா” மலைக்கவைத்த மாவட்ட தொழில் மைய லஞ்சம்.....