சிவகங்கை கல்லூரி சாலையில் வசித்து வருபவர் விக்னேஷ். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அதேநேரம் இலங்கையில் பயிற்சிக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் வீட்டிற்கு இன்று (அக் 7) அதிகாலை வந்த என்ஐஏ அலுவலர்கள், தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் வைத்திருந்த சில புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை என்ஐஏ அலுவலர்கள் கைப்பற்றினர். இந்த சோதனையின்போது உள்ளூர் காவல்துறையினரும் உடனிருந்தனர். மேலும் அதிகாலையில் தொடங்கப்பட்ட இந்த சோதனை சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
இதையும் படிங்க: பிஎப்ஐ அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடை - மத்திய அரசு