ETV Bharat / state

இந்தியாவுக்கு மேட் இன் இத்தாலி பொருந்தாது - இல.கணேசன்

சிவகங்கை: ராகுல்காந்தியின் பேச்சு கலாவதியானது, அபத்தமானது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இல.கணேசன்
author img

By

Published : Apr 13, 2019, 10:22 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது இல.கணேசன் கூறியதாவது, அகில இந்திய கட்சிக்கு தலைவராக இருக்கும் ஒருவர் பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும். ராகுல்காந்தி நேற்று (ஏப்.12) பேசிய பேச்சுக்கள் அபத்தமானது.

காங்கிரஸ் கட்சி இந்திராகாந்தி காலத்தில் இருந்து வறுமையை ஒழிப்போம் ஒன்று சொன்னார்கள். ஆனால் ஒழிக்கவில்லை.

இல.கணேசன்

மோடி வறுமையை ஒழிப்பேன் என்று சொல்லவில்லை. ஆனால் அதற்கான திட்டங்களை சிறப்பாக தீட்டி சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் உயர என்ன செய்யவேண்டுமோ அதை செய்திருக்கிறார்.

ராகுல்காந்தி வறுமையை எதிர்த்து நாங்கள் துல்லிய தாக்குதல் நடத்துவோம் என்று சொல்லி இருக்கிறார். இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி இப்போது மறுபடியும் நாங்கள் துல்லிய தாக்குதல் நடத்துவோம் என்று சொல்லி இருப்பது வேடிக்கையாக உள்ளது. அவர் பேசிய பேச்சுக்கள் பொறுப்பற்ற பேச்சுக்கள்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து பெறப்போவது இல்லை. அதிக பட்சம் 31 முதல் 40 இடங்கள் தான் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் என்று ஒரு கணிப்பு சொல்கிறது.

இந்தியாவை பொருத்தவரையில் மேட் இன் இத்தாலி என்பது பொருந்தாது. தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்று ராகுல் கூறினார்.

இதையே தான் நானும் சொல்கிறேன். வயநாடு பகுதியில் இருந்து ஒரு மலையாளிதான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். வேற்றுநாட்டை சேர்ந்த கலப்பினமான ஒருவர் வெற்றிபெறக்கூடாது. என்று அவர் கூறினார்.

சிவகங்கை. 

இந்தியாவுக்கு மேட் இன் இத்தாலி பொருந்தாது - இல.கணேசன் பேட்டி

சிவகங்கை: இந்தியாவுக்கு மேட் இன் இத்தாலி அதாவது இத்தாலிய தயாரிப்புகள் பொருந்தாது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது

அகில இந்திய கட்சிக்கு தலைவராக இருக்கும் ஒருவர் பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும். ராகுல்காந்தி நேற்று பேசிய பேச்சுக்கள் அபத்தமானது. 
காங்கிரஸ் கட்சி இந்திராகாந்தி காலத்தில் இருந்து வறுமையை ஒழிப்போம் ஒன்று சொன்னார்கள். ஆனால் ஒழிக்கவில்லை. மோடி வறுமையை ஒழிப்பேன் என்று சொல்லவில்லை. ஆனால் அதற்கான திட்டங்களை சிறப்பாக தீட்டி சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் உயர என்ன செய்யவேண்டுமோ அதை செய்திருக்கிறார் என்றார்.

நேற்று பேசிய ராகுல்காந்தி வறுமையை எதிர்த்து நாங்கள் துல்லிய தாக்குதல் நடத்துவோம் என்று சொல்லி இருக்கிறார். இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி இப்போது மறுபடியும் நாங்கள் துல்லிய தாக்குதல் நடத்துவோம் என்று சொல்லி இருக்கிறது.

பாஜகவை பற்றி விமர்சித்த ராகுல், இவர்கள் ஒற்றை கலாச்சாரம், ஒற்றை கொள்கை, ஒற்றை பண்பாடு, ஒற்றை வரலாறு இதனை ஏற்றுக்கொண்டவர்கள் என்று பேசியிருக்கிறார். இதில் எந்த வேறுபாடும் இல்லை இது தான் தேசியம் என்று பெயர். பிரதமர் அலுவலகத்தில் இருந்து இந்தியா இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். பிரதமர் அலுவலகம் என்பது அவருக்கு அலர்ஜியாக இருக்கலாம். அவர் பேசிய பேச்சுக்கள் பொறுப்பற்ற பேச்சுக்கள் என்றார்.

காங்கிரசின் கடைசி 5 ஆண்டுகால ஆட்சியில் வங்கியில் இருந்து ஏராளமான செய்திகள் வந்துவிட்டன. காங்கிரஸ் கட்சி தலைவர் அலுவலகத்தில் இருந்தெல்லாம் வங்கி அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலமாக குறிப்பு வரும். பெரும் பெரும் பணக்காரர்களுக்கு எல்லாம் தொலைபேசி குறிப்பை வைத்தே படம் வழங்கியிருக்கிறார்கள். அப்படி பணம் தந்தது காங்கிரஸ் அரசு. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு கெடுபிடி செய்கிறோம் பணத்தை திருப்பி கேட்கிறோம் என்று தெரிந்தபிறகு நாட்டை விட்டு ஓடி விட்டார்கள் என்றார்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து பெறப்போவது இல்லை. அதிக பட்சம் 31 முதல் 40 இடங்கள் தான் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் என்று ஒரு கணிப்பு சொல்கிறது. அதனால் இவர்களால் எதையும் செய்ய இயலாது. ஒரு தேசிய கட்சி மாநிலத்திற்கு மாநிலம் சூழ்நிலையை பொறுத்து கொள்கையை மாற்றிக்கொண்டு போவது என்பது தவறான விஷயம்.

இந்தியாவை பொறுத்தவரையில் மேட் இன் இத்தாலி என்பது பொருந்தாது. தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்று ராகுல் பேசினார், இதையே தான் நானும் சொல்கிறேன். வயநாடு பகுதியில் இருந்து ஒரு மலையாளிதான் தேர்ந்தெடுக்கப்பட்டு செல்ல வேண்டும். வேற்றுநாட்டை சேர்ந்த கலப்பினமான ஒருவர் செல்லக்கூடாது. ராகுல் சொன்னதை நான் திருப்பி சொல்கிறேன் என்றார்.

ப.சிதம்பரம் பேச்சுக்கு எந்தவித முக்கியத்துவம் நான் கொடுப்பதில்லை. நீட் தேர்வு குறித்து இப்போதும் விவாதம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. சாதகமும் இருக்கிறது பாதகமும் இருக்கிறது என்றார்.

ஸ்டாலினுக்கு முதல்வராக வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் ராசி இல்லை என்று தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.