ETV Bharat / state

'வாய்ப்பில்ல ராஜா, கையில தான் காசு' - பொங்கல் பரிசுத்தொகை குறித்து அமைச்சர் பெரியகருப்பன் - பொங்கல் 2023

பொங்கல் பரிசுத் தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை, அவரவர்களின் நியாயவிலைக் கடைகளிலேயே வழக்கம்போல் பெற்றுக்கொள்ளலாம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை - கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்

author img

By

Published : Jan 3, 2023, 6:24 PM IST

Updated : Jan 3, 2023, 7:03 PM IST

பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை - கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்

சிவகங்கை: பையூர் கிராமத்தில் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வேலுநாச்சியாரின் நினைவு மண்டபத்தில் அவரது 293ஆவது பிறந்த நாள் விழாவானது அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மற்றும் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் பங்கேற்று, வீரமங்கை வேலுநாச்சியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், 'பொங்கல் பரிசு தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை. வழக்கம்போல் அந்தந்த நியாயவிலைக்கடைகளிலேயே பெற்றுக்கொள்ளலாம்’ எனத் தெரிவித்தார். மேலும் பொங்கலுக்கு வழங்கப்படும் கரும்புகள் தமிழக விவசாயிகளிடமே கொள்முதல் செய்யப்படும் என்றும்; 12 கோடி கரும்புகள் தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள நிலையில் 2.19 கோடி கரும்புகள் பயனாளிகளுக்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது பொங்கல் பரிசு தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கவில்லை என்றும்; கரோனா நிவாரணத் தொகையை 5 ஆயிரம் ரூபாயாக வழங்க கோரிக்கை விடுத்தோம் என்றும்; அதனை தவறாக நினைத்துக்கொண்டுள்ளனர் என்றும் பேசினார்.

சிவகங்கையில் வேலுநாச்சியார் பெயரில் பெண் காவலர்களுக்கான பயிற்சிப் பள்ளி அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கைவிடுத்துள்ள நிலையில், அது குறித்து முதலமைச்சரிடம் சட்டமன்றத்தில் அறிவுறுத்துவோம் எனத் தெரிவித்தார்.

மேலும் நியாய விலைக்கடைகள் நவீனமயமாக்கப்படும் என்றும், கடைகள் புதுப்பிக்கப்பட்டு சுத்தமான முறையில் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு நவீனப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். ’தமிழ்நாடு முழுவதுமுள்ள 4,500 கூட்டுறவு தொடக்க கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 2,000 ஆயிரம் கூட்டுறவு கடன் சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. மற்ற கடன் சங்கங்களிலிருந்து கிடைக்கப்பெறும் வருமானத்தை வைத்து அவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. படிப்படியாக அனைத்து கடன் சங்கங்களும் சீர் செய்யப்படும்’ என அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாமக ஆதரவால் தான் திமுக, அதிமுக ஆட்சியைப் பிடித்தது - வழக்கறிஞர் பாலு

Last Updated : Jan 3, 2023, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.