ETV Bharat / state

இளைஞர்மரணம்: காவல் துறை மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

சேலம்: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் வீட்டில் மரணமடைந்தத சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட்
மார்க்சிஸ்ட்
author img

By

Published : Jun 1, 2020, 7:13 PM IST

சேலம் மாநகர் திருவாக்கவுண்டனூர் வெள்ளிப் பட்டறை தொழிலாளி சரவணன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றின் அடிப்படையில் விசாரிக்கப்பட்ட நிலையில் அவர் மரணம் அடைந்த விவகாரம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விசாரணையில் இறங்கிய சேலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், சூரமங்கலம் காவல் துறையினர் மீது குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சேலம் சிபிஎம் கட்சியினர் கூறுகையில், ' ஒரு பொய் புகாரின் மீது விசாரணைக்காக சரவணனை சூரமங்கலம் காவல் துறையினர் மே 21 ஆம் தேதி அழைத்துச் சென்றுள்ளனர் .

பின்னர் காவல் துறையினர் சரவணனிடம் விசாரணை செய்து முடித்து விடுவித்தனர். தனது வீட்டிற்கு வந்த சரவணன் மனையிடமும் , அவரது உறவினர்களிடமும் பொய் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் என்னை அழைத்துச் சென்று விசாரித்தது மட்டுமல்ல கடுமையாக அடித்து துன்புறுத்தியதாக கூறியுள்ளார் . மேலும் உடல் முழுவதும் வலியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார் . அடுத்த நாள் 22.05.2020 அன்று மதியம் சரவணன் தனது வீட்டின் படுக்கையில் படுத்திருந்தபடியே மரணமடைந்துள்ளார் என்று தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக போராடிய சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மாதர் சங்க மாவட்ட செயலாளருமான ஐ.ஞானசௌந்தரி, அவரது கணவர் இருதயசாமி உள்ளிட்டவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சிபிஎம் சார்பில் புதன் கிழமை சேலம் சூரமங்கலம் தலைமை தபால் அலுவலகம் முன்பு மாநகர மேற்கு குழு சார்பில் ஆர்பபாட்டம் நடத்த உள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாநகர மேற்கு செயலாளர் எம்.கனகராஜ் தலைமையில் சந்தித்து பேசினர்.

மாவட்ட செலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு மு்ன்னணியின் மாவட்ட தலைவருமான ஆர்.குழந்தைவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், ஐ.ஞானசௌந்தரி, சேலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.