சேலம்: சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏற்காடு பகுதியில் குண்டூர், தப்பக்காடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. அங்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் தையல்நாயகி இன்று (ஜூலை 21) ஆய்வு மேற்கொண்டு மலைவாழ் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா, கள்ளத்துப்பாக்கி வைத்துள்ளார்களா என ஆய்வுசெய்தார்.
பின்னர் அவர் பொதுமக்களிடம் பேசுகையில், "பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டால் 181 என்ற எண்ணிற்கு அழைத்துப் புகார் தெரிவிக்கலாம்.
மேலும் மலைப்பகுதிகளில் சந்தேகப்படும் வகையில் வெளி ஆள்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல் துறையினருக்குத் தெரிவிக்க வேண்டும்" என்று கூறினார்.
இந்த ஆய்வின்போது காவல் ஆய்வாளர் சசிகலா, உதவி ஆய்வாளர் மாதையன், காவல் துறையினர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: மருத்துவருக்கு இரண்டு வகை கரோனா தொற்று