ETV Bharat / state

'எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து இறுதிவரை போராடுவோம்' - விவசாயிகள் கடும் எதிர்ப்பு

சேலம்: இந்தாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்ததற்கு சேலம் மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

'We will fight till the end against the eight way road project'

author img

By

Published : Feb 3, 2021, 8:19 AM IST

மத்திய பாஜக அரசு நேற்று முன்தினம் (பிப். 1) 2021-22ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்தது. அதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டம் இந்தாண்டு தொடங்கப்படும். அதற்கான டெண்டர்கள் விடப்படும்' என அறிவித்தார்.

இந்த அறிவிப்பிற்கு எட்டு வழிச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக, சேலம் வீரபாண்டி பகுதியில் உள்ள எட்டு வழிச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அடுத்தகட்ட தொடர் போராட்டத்திற்குத் தயாராகிவருகின்றனர்.

இது குறித்து எட்டு வழிச்சாலை எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மோகன சுந்தரம் கூறுகையில், "எட்டு வழிச்சாலை விவசாயிகளுக்காகப் போடப்படுகின்ற சாலை இல்லை. தனியார் முதலாளிகளுக்காகப் போடப்படும் சாலை.

இதில் எந்த ஒரு விவசாயியும் பலனடையப் போவதில்லை. பல ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் (தரகு) கிடைக்கும் என்ற ஒற்றை நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்தத் திட்டத்திற்குத் தலையாட்டிவருகிறார்.

எந்த ஒரு காலகட்டத்திலும் இந்த எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு நிலத்தை வழங்க மாட்டோம். ஆறுகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்த மத்திய அரசு முன்வரவில்லை. ஏன் என்றால் அதில் தரகு கிடைக்காது.

இந்த எட்டு வழிச்சாலைத் திட்டத்தில் மட்டுமே தரகு கிடைக்கும்.‌ எக்காரணத்தைக் கொண்டும் நாங்கள் இந்தத் திட்டத்திற்கு நிலத்தை வழங்க மாட்டோம்.

பல ஆயிரக்கணக்கான வேளாண் நிலத்தை அழித்து போடப்படுகின்ற இந்தச் சாலை விவசாயிகளுக்கு உதவுவதற்கு அல்ல; தனியார் முதலாளிகளுக்குத்தான் போடப்படவுள்ளது.

'எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து இறுதிவரை போராடுவோம்'

சேலம் மாவட்டத்தில் உள்ள கனிமவளங்களைக் கொள்ளையடித்துச் செல்வதற்காகப் போடப்படவுள்ள இந்த எட்டு வழிச்சாலைக்கு எங்கள் உயிரே போனாலும் நிலத்தை வழங்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரையை கலக்கும் சசிகலா ஆதரவு சுவரொட்டிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.