ETV Bharat / state

‘ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கை நடத்தியவர் டிடிவி’ - புகழேந்தியின் புது குண்டு!

சேலம்: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை டிடிவி தினகரனும் திமுகவும் சேர்ந்துதான் நடத்தினார்கள் என்று பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.

பெங்களூர் புகழேந்தி
பெங்களூர் புகழேந்தி
author img

By

Published : Jan 25, 2020, 11:38 AM IST

சேலத்தில் எம்ஜிஆர் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெங்களூரு புகழேந்தி கலந்துகொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ‘டிடிவி தினகரன் கடந்த இரண்டு மாத காலமாக காணாமல் போய்விட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்பதே யாருக்கும் தெரியவில்லை. டிடிவியின் அரசியல் முடிந்துபோன அரசியல். அதிமுகவையும், ஆட்சியையும் ஒன்றும் செய்ய முடியாது. திமுகவின் அரசால் இரண்டு வழக்குகள் போடப்பட்டன. ஒன்று லண்டன் வழக்கு. அதில் குற்றம்சாட்டப்பட்டவர் டிடிவி.

பெங்களூரு புகழேந்தி பேட்டி

இன்னொன்று முன்னாள் முதலமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு. இதில், டிடிவி தினகரன் திமுகவிடம் மண்றாடி லண்டன் வழக்கை வாபஸ் பெறச்செய்தார். அதன்பின்னர் திமுகவும் டிடிவி தினகரனும் சேரந்துதான் சொத்துக்குவிப்பு வழக்கை நடத்தினர்.

அதுதான் இப்படி ஒரு கடுமையான தீர்ப்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது வருவதற்கு காரணமாக இருந்தது. டிடிவி தினகரன் பொதுமக்களிடமும் மீடியாக்கள் முன்பும் பேச பயப்படுகிறார். ஆர்.கே. நகர் தொகுதியில் சென்று மக்களைச் சந்திக்க முடியவில்லை.

17 சட்டப்பேரவை உறுப்பினர்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டார். அவர் மட்டும் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சியை எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் இணைந்து கட்டிக்காத்து வருகின்றனர்’ என்றார்.

இதையும் படிங்க: குமரியில் அய்யா வைகுண்டசாமியின் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி

Intro:சேலத்தில் எம்ஜிஆர் 103 வந்து பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெங்களூரு புகழேந்தி கலந்து கொண்டு பேசினார்.
Body:
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில்,"

டிடிவி தினகரன் கடந்த இரண்டு மாத காலமாக காணாமல் போய்விட்டார் .

அதனால் அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. தேர்தலில் ஜெயித்து விட்டோம் என்று போலித்தனமாக பேசி வருகிறார் .

ஒரு இடத்திலாவது முனிசிபல் எலக்சனில் வெற்றி பெற்று காட்டட்டும் .

நூறு வாக்குகளை வைத்துக்கொண்டு நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஏதோ உள்ளூர் மதிப்பை வைத்துக்கொண்டு வெற்றி பெற்றுவிட்டு, அவர் ஆளுமை மிக்கவர் என்று சொல்ல முடியாது .

டிடிவி தினகரன் அரசியல் முடிந்துபோன அரசியல். முடிந்தே போய்விட்டார் .

இந்த கட்சியையும் ஆட்சியையும் ஒன்றும் செய்ய முடியாது.

டிடிவிதினகரன் காணாமல் போய்விட்டார். அவருக்கு முகவரி இல்லாமல் போய்விட்டது.

திமுகவின் தலைவர் கருணாநிதி அரசால் இரண்டு வழக்குகள் போடப்பட்டது .

ஒன்று லண்டன் வழக்கு. இன்னொன்று சொத்துக்குவிப்பு . லண்டன் வழக்கில் நிரபராதி என்று கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பளித்தது .

அதன் பின்பு மேல்முறையீடு தீர்ப்பு காரணமாக எங்களை விட்டு அம்மா பிரிந்து சென்றார்கள் .

இந்த இரண்டு வழக்கையும் ஒருங்கிணைத்து நடத்தி இருந்தால் நிச்சயமாக அப்படிப்பட்ட தீர்ப்பு வந்து இருக்க வாய்ப்பு இல்லை.

தி மு க லண்டன் வழக்கை திரும்ப பெற்றது. யார் மீது இந்த வழக்கு. டிடிவி தினகரன் மீது இருந்த வழக்கை திராவிட முன்னேற்றக் கழகம் வாபஸ் வாங்கியது .

அதனை வாபஸ் பெற்றதும் பின்னால் வழக்கு தன்மையை அறிந்து வாபஸ் பெற செய்து திமுகவிடம் டிடிவி தினகரன் மண்டியிட்டு வாபஸ் செய்து டிடிவி தினகரன் திமுகவும் சேர்ந்துதான் சொத்துகுவிப்பு வழக்கை நடத்தியதால் தான் இப்படி ஒரு கடுமையான தீர்ப்பு வருவதற்கு காரணமாக இருந்தது .

இந்த உண்மையை தான் இந்த பொதுக்கூட்டத்தில் பேசினேன்.

தற்போது செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளேன் .

என்னிடம் ஆதாரம் இல்லாமல் இதை நான் தெரிவிக்கவில்லை. அந்த இரண்டு வழக்குகளில் இருந்தால்தான் இப்போதைக்கு அந்த வழக்கு முடிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

டிடிவி தினகரன் மக்களை சந்திக்க பயப்படுகிறார் பொதுமக்களிடம் தொண்டர்களிடமும் தனது முகத்தை காட்டுவதற்கு பயப்படுகிறார்.

டிடிவி தினகரன் பொதுமக்களிடமும் மீடியாக்கள் முன்பும் பேசவும் பயப்படுகிறார். ஆர் கே நகர் தொகுதியில் சென்று மக்களை சந்திக்க முடியவில்லை. 17 சட்டமன்ற உறுப்பினர்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டார். அவர் மட்டும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் .

எந்த விஷயத்தையும் செய்வதற்கும் சொல்லுவதற்கும் ஆற்றல் அற்ற நபராக டிடிவி தினகரன் இருந்து வருகிறார்.

எம்ஜிஆர் , ஜெயலலிதா இருவரும் வளர்த்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி என்கிற முதலமைச்சர் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருங்கிணைந்து அஇஅதிமுக வை கட்டிக்காத்து வருகின்றனர்.

டிடிவி தினகரன் முகவரி இல்லாமல் போய்விடுவார் என்று புகழேந்தி தெரிவித்தார்.

visual send mojo Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.