திமுக, காங்கிரஸ் கூட்டணி சார்பில் சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில்,
கடந்த 5 ஆண்டுகளில் மோடி, மூன்று முதல் நான்காண்டு காலம் இந்தியாவிலேயே இல்லை. ஆனால் தேர்தல் நெருங்கியதால்தான் 3 முறை மோடி தமிழகத்திற்கு வந்துள்ளார். மத்திய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் பாக்கியை மோடி அரசு வைத்துள்ளது. மோடிக்கு இன்னொரு முறை வாய்ப்பு கொடுத்தால் இந்தியாவை இன்னும் 50 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டுச் சென்றுவிடுவார்.
ஆட்சியை விட்டு மோடியை துரத்தினால், தமிழகத்தில் உள்ள ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ஓடி விடுவார்கள். கூவத்தூரில் சின்னம்மா காலில் தவழ்ந்து போய் முதலமைச்சர் பதவியை பெற்றவர் எடப்பாடி பழனிசாமி. அடிப்படை பொறுப்பில் இருந்து படிப்படியாக உயர்ந்து கழகத்தின் தலைவராகியவர் ஸ்டாலின். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியே நடக்கிறது. அம்மா வழியில் ஆட்சி செய்வதாக கூறுபவர்கள் அம்மா மரணத்தில் உள்ள மர்மத்தை மட்டும் ஏன் சொல்லவில்லை, என்றார்.