ETV Bharat / state

பொறியியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை - கே.பி.அன்பழகன் - பொறியியல் மாணவர் சேர்க்கை

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

anbazhagan
author img

By

Published : Jun 28, 2019, 4:43 PM IST

தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பின் சார்பில் பொறியியல் படிப்பிற்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கான கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பொறியியல் படிப்புக்கான வேலைவாய்ப்புகள் குறித்து கூறினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,

தமிழ்நாட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்ற நிலையை கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக ஏற்படுத்தி வருகின்றனர். அதனைத் தெளிவுபடுத்தும் வகையில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில், கடந்த 2015ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை நடத்தினார்.

அதன்பின் இந்தாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு அதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் சேர்வதற்கு ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 350 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு ஜூலை 8ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் சேர தயாராக உள்ளனர். தற்போது தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

பொறியில் படிப்பில் அரசு நடத்தும் கலந்தாய்வு மூலம் 90,000 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீடு மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 60 ஆயிரம் மாணவர்கள் என சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் சேருகிறார்கள். தமிழ்நாட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பதற்கு இது ஒரு சான்று என அவர் கூறினார்

பொறியியல் படிப்பு மாணவர்களுக்கான கருத்தரங்கு

Intro:தமிழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையவில்லை
உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் பேட்டி
Body:சென்னை, தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பின் சார்பில் பொறியியல் படிப்பிற்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கான கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே பி அன்பழகன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் முடித்தாள் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் கே. பி .அன்பழகன், தமிழகத்தில் பொறியியல் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்ற நிலையை கடந்த இரண்டு ,மூன்று ஆண்டுகளாக ஏற்படுத்தி வருகின்றனர். அதனைத் தெளிவு படுத்தும் மொழியில் தனியார் பொறியியல் கல்லூரி கூட்டமைப்பினர் கருத்தரங்கினை நடத்தியுள்ளனர்.

பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் 2015 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடத்தினார். அப்போது போடப்பட்ட ஒப்பந்தங்கள் தற்போது செயல்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. அதேபோல் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2019 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, அதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது.
பல்வேறு திட்டங்களின் மூலம் படிப்படியாக வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையிலும் ஒப்பந்தங்களை நிறைவேற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.
பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கையை கல்லூரிகள் அதிகரித்துள்ளன. இதனால் காலியிடங்கள் அதிகரித்துள்ளது.
500 பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் அரசு ஒதுக்கீட்டின் மூலம் சுமார் 90 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே சேர்கின்றனர்.
இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் 479 கல்லூரிகளில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. எனவே சுமார் 200 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்.
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் சேர்வதற்கு ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 350 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு ஜூலை 8 ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் சேருவதற்கு தயாராக உள்ளனர்.
சிறப்பு பிரிவினரில் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட 500 இடங்களுக்கு 1058 மாணவர்கள் அழைக்கப்பட்டு 330 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் 101 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். ராணுவ வீரர்களுக்கான ஒதுக்கீட்டை இவர்களில் 121 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இன்று. மாலை எத்தனை மாணவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவரும். பொறியில் படிப்பில் அரசு நடத்தும் கலந்தாய்வு மூலம் 90,000 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீடு மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 60 ஆயிரம் மாணவர்கள் என சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் சேருவார்கள் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வில்லை எனவும் அவர் கூறினார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.