கரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதனைத் தடுக்கும்விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்புப் பணிகள் மேற்கொண்டுவருகின்றன.
இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், நிபந்தனைகளுடன் தற்காலிக உழவர் சந்தை அமைத்து பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்று, தனி நபர் இடைவெளியைப் கடைப்பிடிக்காமல் காய்கறிகளை வாங்கினர்.
இதனையறிந்த காவல் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் பலமுறை ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியும், பொதுமக்கள் அவர்களின் அறிவுரையை காற்றில் பறக்கவிட்டு கூட்டம் கூட்டமாக நின்று பொருள்களை வாங்கினர்.