ETV Bharat / state

Tahdco: தாட்கோ கடன் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம்.. மேனேஜர் அதிரடி கைது! - தாட்கோ மேலாளர் கைது

சேலம், சீலநாயக்கன்பட்டி அருகே செயல்பட்டு வரும் தாட்கோ நிறுவனத்தில் டிராக்டர் வாங்க மானிய கடன் உதவி வழங்க, ரூ.15,000 லஞ்சம் வாங்கிய மேலாளர் மற்றும் உதவியாளர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட தாட்கோ மேலாளர் மற்றும் உதவியாளர்

author img

By

Published : Jun 16, 2023, 4:27 PM IST

சேலம்: தாட்கோ அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் வகுப்பு மக்களுக்கு, கடன் சலுகைகள் மற்றும் கடன் தொகை மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் மிகவும் அடித்தட்டு நிலையில் உள்ள ஆதி திராவிடர் தொழில் முனைவோர் மற்றும் விவசாயிகள் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.

ஆதி திராவிட மக்களின் ஒரே பொருளாதார ஆதாரமாக விளங்கும் தாட்கோ நிறுவனம் மூலம் சேலம் மாவட்டத்தில் பல ஆயிரம் ஆதிதிராவிட மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் மணியார்குண்டம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர், தாட்கோ மூலம் டிராக்டர் வாங்க கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாட்கோ மாவட்ட மேலாளரைத் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து உள்ளார்.

அதனைத் தொடர்ந்து குமாரிடம் நேர்காணல் செய்யப்பட்டு உள்ளது. பின், ரூபாய் 7.50 லட்சம் மதிப்பிலான கடனுக்கு, 50 சதவீதம் மானியம் வழங்குவதற்காக ரூபாய் 15 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என மாவட்ட மேலாளர் (பொறுப்பு) சாந்தி குமாரிடம் வற்புறுத்தி உள்ளார். அதிர்ச்சி அடைந்த குமார் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை என்று கூறி உள்ளார். பின் லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார், இந்த சம்பவம் குறித்து சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையிடம் புகார் அளித்தார்.

இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துறை அறிவுறுத்தல் படி, குமார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, மாவட்ட மேலாளர் சாந்தியிடம் இன்று கொடுக்க வந்தார். அப்போது, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் ரவிச் சந்திரன் தலைமையிலான காவல் துறையினர், லுங்கி அணிந்த படி மாறுவேடத்தில் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்குள் வந்தனர். மாவட்ட மேலாளர் பொறுப்பில் உள்ள சாந்தியிடம் இன்று குமார் லஞ்சம் பணத்தைக் கொடுக்க முயன்றார்.

அப்போது மாவட்ட மேலாளர் பொறுப்பில் உள்ள சாந்தி அலுவலக உதவியாளரான மற்றொரு சாந்தியிடம் வழங்குமாறு தெரிவித்ததை அடுத்து, குமார் அவரிடம் சென்று லட்சம் பணத்தை வழங்கினார். அப்போது அலுவலகத்திலிருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். பின், மாவட்ட மேலாளர் சாந்தி மற்றும் உதவியாளர் சாந்தி ஆகிய இருவரையும் கைது செய்து உள்ளனர்.

அதன் பின் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாட்கோ நிறுவனத்தின் டிராக்டர் வாங்குவதற்கு மானிய கடன் பெற 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: "சாதி வன்முறையைத் தூண்டும் மருத்துவர் ராமதாஸ்" பிசிஆர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க விசிக புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.