ETV Bharat / state

மக்களின் கருத்தைக் கேட்ட பின் மாவட்டங்களை பிரியுங்கள்- ஸ்டாலின் - சேலம்

சேலம்: தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களை பிரிப்பதாக இருந்தால் மக்களின் கருத்தைக் கேட்ட பின் பிரியுங்கள், என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

stalin
author img

By

Published : Aug 27, 2019, 10:15 PM IST

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி மக்களின் பிரச்னை பற்றி சிறிதும் சிந்தித்து பார்க்காத ஆட்சி. நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திமுக சார்பில் ரூ. 10 கோடி நிதி கொடுத்ததற்கு விளம்பரத்திற்காக கொடுத்ததாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

அவருக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். எந்த ஒரு துணையும் இல்லாமல் ஒரு கிராமத்திற்கு நான் செல்கிறேன் என்னை எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள். ஆனால் நீங்கள் செல்லுங்கள் உங்களை அடையாளம் கண்டு கொள்கிறார்களா? என பார்ப்போம்” என்றார்.

திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரை

மேலும் பேசிய அவர், ”தற்போது தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களைப் பிரித்துள்ளார்கள். இவர்கள் பிரிப்பதை தவிர வேறு ஏதாவது செய்கிறார்களா? என்று பார்த்தால் எதுவும் செய்யவில்லை. மத்தியில் மாநிலங்களை பிரிக்கிறார்கள். மாநிலத்தில் மாவட்டங்களை பிரிக்கிறார்கள்.

மாவட்டங்கள் பிரிப்பது குறித்து முறையாக மக்களிடம் கருத்து கேட்ட பின் பிரிக்க வேண்டும். இடைத் தேர்தல்களில் எப்போதும் ஆளுங்கட்சிதான் வெற்றிபெறும் ஆனால் தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுக வெற்றிபெற்றது.

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது. இதனை தடுத்து நிறுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு துண்டு அறிக்கை கூட வெளியிடவில்லை. ஆனால், வெளிநாடு செல்ல மட்டும் அவருக்கு நேரமிருக்கிறது. முதலமைச்சரின் இந்த செயல் மிகவும் வெட்கக்கேடானது" என்று காட்டாமாகக் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.