ETV Bharat / state

'எனது பயோபிக்கில் சிவகார்த்திகேயன்' - கிரிக்கெட் வீரர் நடராஜன் தகவல்!

author img

By

Published : Dec 11, 2022, 1:11 PM IST

Updated : Dec 11, 2022, 2:37 PM IST

எனது வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடித்து தயாரிக்கவும் செய்வார் என கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

என் வாழ்க்கை வரலாறு படத்தில் சிவகார்த்திகேயன் தான் நடிப்பார்..! - கிரிக்கெட் வீரர் நடராஜன்

சேலம்: சேலத்தில் மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மாரத்தான் என்பது அனைவருக்கும் முக்கியம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாரத்தான் ஓட்டம் ஓட வேண்டும். உடல் வலிமையை மன வலிமை தைரியத்தை அதிகரிக்க மாரத்தான் எப்பொழுதுமே உறுதுணையாக இருக்கும்.

அனைத்து விளையாட்டிற்கும் ஓட்டம் என்பது தேவைப்படுகிறது. அதிகளவில் கிராமப்புறங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் உருவாக வேண்டும். என்னைப் போல இன்னும் நிறைய இளைஞர்கள் விளையாட்டில் சாதிக்க வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை. இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடுவேன்.

என்னுடைய திறமைகள் முழுமையும் வெளிப்படுத்தி கட்டாயம் இந்திய அணியில் மீண்டும் பங்கேற்று விளையாடுவேன். என்னுடைய வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் கட்டாயம் எடுக்கப்படும் அதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்னுடைய கிரிக்கெட் கேரியருக்கு பின்பு தான் இந்த படம் எடுக்க போகிறேன். கட்டாயம் அவர்தான் நடிப்பார் அவரே தயாரிக்கவும் உள்ளார்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

இதையும் படிங்க: ஆர்யா - முத்தையா இணையும் படத்திற்கு வித்தியாசமான தலைப்பு!

Last Updated : Dec 11, 2022, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.