சேலம் மாவட்டம் சிவதாபுரம் அடுத்த வேடுகாத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். வெள்ளி தொழிலாளியான இவரது தம்பி சந்தோஷ், தாயார் பெரியதாய் ஆகியோருடன் சேலம் அடுத்த பெரியபுத்தூர் பகுதியில் வசித்துவந்தார்.
இந்நிலையில் இன்று (மார்ச் 18) காலை செல்வம் தனது தாயைப் பார்க்க பெரியபுத்தூர் வந்துள்ளார். அப்போது சந்தோஷுக்கும், செல்வத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
வாய்த்தகராறு முற்றிய நிலையில், சந்தோஷ் தனது வீட்டில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துவந்து செல்வத்தைச் சுட்டுள்ளார். இதில் செல்வம் சம்ப இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
![சேலத்தில் அண்ணனை சுட்டுக் கொன்ற தம்பி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-slm-01-murder-vis-pic-script-7204525_18032021133348_1803f_1616054628_548.jpg)
இதனையடுத்து செல்வம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்த கொண்டலாம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தலைமறைவான சந்தோஷை தேடிவருகின்றனர்.
காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சகோதரர்கள் இருவருக்கும் இடையே பெரியபுத்தூரில் உள்ள வீட்டுமனையைப் பிரித்துக்கொள்வதில் ஏற்கனவே தகராறு இருந்துவந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதன் உச்சகட்டமாக இந்தக் கொலை நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்தக் கொலைக்கு வேறு காரணம் ஏதேனும் உள்ளதா எனக் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க...ELECTION BREAKING: வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு