மக்களுக்குத் தேவையான பாத்திரங்கள், சமையலறைப் பொருள்கள் மற்றும் மேஜைப் பாத்திரங்களை நேரடியாக, பொது மக்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில், சேலம் உருக்காலை ஆலையின் புதிய விற்பனையகத்தை நிர்வாக இயக்குநர் ஸ்ரீசஞ்சீவ் தனேஜா திறந்து வைத்தார்.
சேலம் உருக்காலை வளாகத்தில் உள்ள இரண்டாவது நுழைவுவாயில் அருகில் இந்த விற்பனை நிலையம் அமைந்துள்ளது.
இரும்பாலை டவுன்ஷிப், மோகன் நகர், ஸ்டீல் ஆலை - தாரமங்கலம் சாலையில் அமைந்துள்ள இந்த விற்பனை நிலையம் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களிடையே பிரபலமான சேலம் ஸ்டீல் ஆலையின் பல மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள், இந்தக் கடை மூலம் விற்பனை செய்யப்படுகிறது.