ETV Bharat / state

பட்டப்பகலில் தங்கச் சங்கிலி பறிப்பு - பொதுமக்கள் அச்சம்! - சந்தையில் திருட்டு

சேலம்: ஓமலூரில் இன்று காய்கறி வாங்க சென்ற பெண்ணை வழிமறித்து 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

salem robbery in market, சேலம் சந்தையில் திருட்டு
author img

By

Published : Oct 18, 2019, 4:06 PM IST

சேலம் மாவட்டம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட ஆசிரியர் நகரில் வசிப்பவர் பிரபாகரன். இவரது மனைவி ராதிகா இன்று காலை பேருந்து நிலையத்தில் உள்ள காய்கறி சந்தைக்கு பால் மற்றும் காய்கறிகளை வாங்கச் சென்றுள்ளார். அப்பொழுது கடைவீதி செல்லும் சாலையில் ஹெல்மெட் அணிந்திருந்த இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். திடீரென வேகமாக வந்த அவர்கள் ராதிகா முன்பாக நின்றனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்திருந்தவர் ராதிகாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறிக்க, இருவரும் மின்னல் வேகத்தில் பறந்து சென்றனர்.

salem robbery in market, சேலம் சந்தையில் திருட்டு

இதனால் அதிர்ச்சியடைந்த ராதிகா சத்தம் போட்டுள்ளார். பொதுமக்கள் ஓடிவந்து அவரிடம் விசாரித்து பார்ப்பதற்குள் ஹெல்மெட் வழிப்பறி கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். பின்னர் ராதிகா ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: செல்ஃபோன் கடைகளில் நூதன முறையில் திருடும் இரண்டு இளைஞர்கள் !

Intro:
ஓமலூரில் இன்று காய்கறிகளை வாங்கி சென்று கொண்டிருந்த பெண்ணை வழிமறித்து 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற வழிப் பற்றிக் கொள்ளையர்களை ஓமலூர் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
Body:

சேலம் மாவட்டம், பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட ஆசிரியர் நகரில் வசிப்பவர் பிரபாகரன் இவரது மனைவி ராதிகா இன்று காலை பேருந்து நிலையத்தில் உள்ள காய்கறி சந்தைக்கு பால் மற்றும் காய்கறிகளை வாங்க சென்றுள்ளார். பின்பு அங்கு வீட்டிக்கு தேவையான பால் மற்றும் காய்கறிகளை வாங்கிகொண்டு வீட்டிற்கு திரும்பிகொண்டிருந்தார். அப்பொழுது பேருந்து நிலையத்தில் இருந்து கடைவீதி செல்லும் சாலையில் செல்லும்போது அவரை இரண்டு பேர் ஹெல்மெட் அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வந்தனர். இதைதொடர்ந்து வேகமாக வந்த கொள்ளையர்கள் ராதிகா முன்பாக நின்றனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்திருந்த கொள்ளையன் ராதிகாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு இருவரும் மின்னல் வேகத்தில் பறந்து சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டுள்ளார். இதைகேட்ட பொதுமக்கள் ஓடிவந்து அவரிடம் விசாரித்து பார்ப்பதற்குள் ஹெல்மெட் வழிப்பறி கொள்ளையர்கள் தப்பி சென்றனர்.

இதனையடுத்து தங்க சங்கிலியை பறிகொடுத்த ராதிகா காய்கறி சந்தைக்கு சென்று திரும்பும்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரட்டை ஹெல்மெட் கொள்ளையர்கள் கழுத்தில் இருந்த தங்கசங்கிலியை பறித்து சென்றதாக ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

ராதிகா அளித்த புகாரின் பேரில் கொள்ளையர்களை ஓமலூர் காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

Conclusion:
பட்டப்பகலில் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.