ETV Bharat / state

சுயேச்சையாக களமிறங்கிய பாமக அதிருப்தி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு

சேலம்:  போதிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி சுயேச்சையாக களமிறங்கிய பாமக அதிருப்தி வேட்பாளரின் வேட்புமனுவை தேர்தல் அலுவலர்கள் நிராகரித்தனர்.

salem election
author img

By

Published : Mar 27, 2019, 9:53 PM IST

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் மார்ச் 19ஆம் தொடங்கி, நேற்றுவரை (மார்ச் 26) வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.

சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட, பாமக அதிருப்தி பிரமுகர்ஏபி.குமார் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவருடன் சேர்த்து மொத்தம் 37 பேர் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏ.பி.குமார் உட்பட 22 சுயேட்சை வேட்பாளர்களின்வேட்புமனுக்களில்போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஏபி.குமார் தனது மனு நிராகரிப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் புகார் தெரிவித்தார். மனு நிராகரிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில், "அதிமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்ததுபெரும்பாலான தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை.

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்று கூறிய மருத்துவர் ராமதாஸ் இப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார். இதனால், சேலத்தில் ஆயிரக்கணக்கான பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் அவர்மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.

இதனையடுத்து அக்கட்சியிலிருந்து நானாகவே விலகி, சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தேன். அவர்கள் கேட்ட ஆவணங்களையெல்லாம் இணைத்து கொடுத்திருந்தேன். ஆனால் எனது மனுவை நிராகரித்து விட்டனர். இது அதிமுக கூட்டணி வேட்பாளரைவெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதற்காக சதிசெய்து எனது மனுவை நிராகரித்ததாகவே கருதுகிறேன்.

எனவே அதிமுக கூட்டணி தோல்வி அடைய சேலம் மாவட்டம் முழுக்க பல்வேறு கட்ட பரப்புரைகளை அதிருப்தி பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் செய்யவிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு
சேலம் பாமக பிரமுகர்

Intro:சேலம் பாமக பிரமுகர் , ஏ பி குமார் சுயேட்சையாகப் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி குமாரின் மனு இன்று நிராகரிக்கப்பட்டது.

Body:சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட , பாமக பிரமுகர் ஏ பி குமார் சுயேட்சை வேட்பாளராக, வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் இன்று சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்த 37 பேரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இதில் 22 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி நிராகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் சேலம், பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் ஏ பி குமார் தனது மனுவும் நிராகரிக்கப்பட்டதாக புகார் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஈடுபட்டார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மனு நிராகரிக்கப் பட்டது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏ.பி.குமார், " அதிமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்து பெரும்பாலான தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை.

திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறிய மருத்துவர் ராமதாஸ் இப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார். இதனால் சேலத்தில் ஆயிரக்கணக்கான பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் அவர் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.

இதனை அடுத்து அக்கட்சியிலிருந்து நானாகவே விலகி, சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தேன். அவர்கள் கேட்ட ஆவணங்களையெல்லாம் இணைத்து கொடுத்து இருந்தேன்.

ஆனால் எனது மனுவை நிராகரித்து விட்டனர். இது அதிமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக சதி செய்து எனது மனுவை நிராகரித்ததாகவே கருதுகிறேன்.

எனவே அதிமுக கூட்டணி தோல்வி அடைய சேலம் மாவட்டம் முழுக்க பல்வேறு கட்ட பிரச்சாரங்களை அதிருப்தி பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் செய்யவிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

Conclusion:முன்னாள் பாமக பிரமுகர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவரின் வேட்புமனு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நிராகரிக்கப்பட்டது சேலம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.