ETV Bharat / state

சேலம் புதியப் பேருந்து நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள்! - 144 Section

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அண்டை மாவட்டங்களுக்குச் செல்லக் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகளைக் காவல் துறையினர் தனியார் ஆம்னி பேருந்துகளில் அனுப்பி வைத்தனர்.

tamilnadu salem 144 act சேலம் புதியப் பேருந்து நிலையம் பேருந்து நிலையம் 144 தடை உத்தரவு ஆம்னி பேருந்து Salem New Bus Stand 144 Section Salem New Bus Stand 144 section
Salem New Bus Stand
author img

By

Published : Mar 25, 2020, 8:48 AM IST

தமிழ்நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, சேலம் மாநகரின் பெரும்பாலான சாலைகள் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சேலம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகியப் பகுதிகளில் அரசு, தனியார் பேருந்துகளின் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், சேலத்திலிருந்து அண்டை மாவட்டங்களான ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கரூர், திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்ல முயன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துகள் இயக்கப்படாததால் அவதிப்பட்டனர்.

சேலம் புதியப் பேருந்து நிலையம்

பின்னர் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து சேலம் மாநகரக் காவல்துறை சார்பில் தனியார் ஆம்னி பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டன. அண்டை மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் காவல்துறை ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, பயணிகள் ஆம்னி பேருந்துகளில் ஏறிச் சென்றனர். இதனிடையே, ஆம்னிப் பேருந்துகளில் மிக அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டினர்.

இதையும் படிங்க:நகரப் பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணிகள் தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.