ETV Bharat / state

இந்தி திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் - diravidar kazagam

சேலம்: இந்தி திணிப்பை நடைமுறைப்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திராவிடர் கழகத்தினர் ஆர்பாட்டம்
author img

By

Published : Jun 15, 2019, 2:27 PM IST

இது குறித்து சேலம் மண்டல தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், "மத்திய அரசு, மாநில உரிமைக்கு எதிராக செயல்பட்டுவருகிறது. மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியை தமிழர்களின் மீது திணித்து பன்முகத்தன்மையை சீரழிக்கிறது. இருமொழிக் கொள்கையை கடைப்பிடித்துவரும் தமிழ் மாநில உரிமைக்கு எதிராக மும்மொழிக் கொள்கையை திணிக்க தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.

இதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தியாவின் பன்முகத் தன்மையை சீரழிக்கும், விரோத நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இன்று மாநில அளவில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம், பெரும் போராட்டமாக மாறி மத்திய அரசை அடிபணியவைக்கும்" என்றார்.

Intro:மாநில உரிமை, சமூக நீதிக்கு எதிராக இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகள் திணிப்பை நடைமுறைப்படுத்தும் மத்திய அரசுக்கு எதிராக சேலத்தில், திராவிடர் கழகத்தினர் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Body:இந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் கழகத்தின் சேலம் மாவட்டத் தலைவர் ஜவஹர், சேலம் மண்டலத் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் இளவழகன் உள்ளிட்ட திராவிடர் கழகத்தினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திராவிடர் கழகத்தின் சேலம் மண்டல தலைவர் சுப்பிரமணியன் கூறும்போது," மத்திய அரசு மாநில உரிமைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியை தமிழர்களின் மீது திணித்து பன்முகத்தன்மையை சீரழிக்கிறது.

இருமொழிக் கொள்கையை கடைப்பிடித்து வரும் தமிழ் மாநில உரிமைக்கு எதிராக மும்மொழிக் கொள்கையை திணிக்க நடவடிக்கையை கடுமையாக இருக்கிறது.

இதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் . இந்தியாவின் பன்முகத் தன்மையை சீரழிக்கும் பாஜக அரசின் தமிழர் விரோத நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லை என்றால் இன்று மாநில அளவில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் பெரும் போராட்டமாக மாறி மத்திய அரசை அடிபணிய வைக்கும் " என்று தெரிவித்தார்.

Conclusion:ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும் மும்மொழி கொள்கைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.